டெல்லியில் வசித்து வரும் பெண் ஒருவர் மேற்கொண்ட ஊபர் பயணம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்துல் காதர் என்பவர் தன்னுடைய ஊபர் காரை பயணிகளின் வசதிக்காக சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதில் முன் இருக்கைகளின் பின்னே தட்டுகள், ஹோல்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதோடு குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகள், பொம்மைகள், மூலிகை மருந்துகள் என அனைத்து வசதிகளும் இலவசமாக பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும் குப்பைகளை போடுவதற்கு சிறிய குப்பை தொட்டியும் காரில் இருந்தது. இதைத்தொடர்ந்து பயணிகள் தங்களது ஃபீட்பேக் தெரிவிப்பதற்காக ஒரு டைரியும் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிறப்பான சேவையை காரில் பயணித்த பெண் ஒருவர் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “உண்மையில் ஒரு 1BHK வீட்டில் பயணிப்பது போல உணர்கிறேன்” என்றும், “இதுவரை பார்த்த மிக சிறந்த ஊபர் ரைடு” என்றும் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஊபரின் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இனிமையான அனுபவமும், அதே நேரத்தில் பாதுகாப்பு அச்சங்களும் பேசப்படும் வகையில் இந்த ஊபர் பயணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.