சென்னை பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலை பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்த போது சந்தேகித்தபடி இருந்த வட மாநில நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த பல்வர் சிங், பலியர் சிங், அஞ்சனா டிகல் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் ஒடிசா மாநிலம் பள்ளி கொண்டாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து தாம்பரம் பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.