சென்னை கிஷ்கிந்தா சாலை மதுரவாயல் பைபாஸ் சாலையில் மெத்தபெட்டமைன் போதை பொருள்களை காரில் வைத்து விற்பனை செய்ததாக 4 பேரை தாம்பரம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த அப்பிசிரா, ரஹீம், சுபின்ஷா, அப்துல் ஷெரிப் ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் பெங்களூருவிலிருந்து மெத்தபெட்டமைன் போதை பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 61.4 கிராம் மெத்தபெட்டமைன், கார், 7 செல்போன் ஆகியவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.