
தன் பாத் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு சென்ட்ரல் சாணிகுளம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலிலிருந்து இறங்கிய இளைஞர்கள் இருவர் ஓட முயன்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் இருவரையும் பிடிக்க முயன்ற போது இளைஞர்கள் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.
இதில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது இருவரும் கேரளாவை சேர்ந்த ஆலன், அஸ்வின் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. பின்னர் இவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.