மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வினோத் ரத்தோர் (35) என்பவர் வசித்து வருந்துள்ளார். இவர் நேற்று தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பிரமோத் சாய் யாதவ்(29) என்பவரை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். திடீரென இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் வினோத், தான் வைத்திருந்த மடிப்பு கத்தியை கொண்டு பிரமோத்தை தாக்கினார். அதில் அவரது விரலில் லேசான காயம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பிரமோத் கத்தியை பறித்து, வினோத்தை சரமாரியாக தாக்கினார். அதன் பின் அவரது கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரமோத் அவரது வீட்டிற்கு தப்பி சென்ற போது, அங்கு உள்ளவர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மடிப்பு கத்தியையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.