
மயிலாடுதுறையை அடுத்துள்ள மதுரா நகர் என்ற பகுதியில் நிர்மலா என்ற மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மூதாட்டியை இளைஞர் 15 முறை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி சரிந்து கீழே விழுந்தார். இதை தடுக்க வந்த மூதாட்டியின் கணவரையும் அவர் மூன்று இடங்களில் கத்தியால் குத்தினார். இதையடுத்து படுகாயம் அடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.