சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூர் மாவட்டத்தில் CRPF வீரராக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நிலையில் இன்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதோடு அதிலிருந்து 30 சவரன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. உடனே இது குறித்து பட்டாபிராம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு தடவியல் நிபுணர்களும் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் குற்றவாளிகளை வலை வீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.