
டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில், DJ ஒருவர் ப்ளே செய்த பாலிவுட் பாடல் ஒன்று, விழாவின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. நடிகர் ரன்வீர் கபூரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் இடம்பெற்ற ‘சன்னா மெரேயா’ என்ற உணர்ச்சிவசமான பாடலை, DJ ப்ளே செய்ததும், மணமகனுக்கு தனது முன்னாள் காதலியின் நினைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அவர் எதிர்பாராதவிதமாக திருமணத்தை நிறுத்திவிட்டு திருமண மண்டபத்திலிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலவிதமான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். “DJ ஒரு பாடலால் ஒரு மணமகன் இவ்வளவு பாதிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது” என ஒருவர் தெரிவித்திருந்தார்.
மற்றொரு பயனர், “இதனால் மணமகளின் நிலைமை என்னவாகும்?” என சோகமாக கூறியிருந்தார். உணர்ச்சிகளை தூண்டும் வகையில் உள்ள இந்த பாடல், ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தை முற்றிலும் மாற்றியமைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.