
இந்தியாவில் சமீப காலமாக சில மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள லே பகுதியில் இருந்து 166 கிலோமீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.