அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் நடந்த அதிமுக ஐடிஐ விங் கூட்டத்தில், இளைஞர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இளைஞர்கள் கையில் 40 சதவீதம் வாக்குகள் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களின் விருப்பங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ற மாதிரி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இளைஞர்களின் ஆதரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் புதிய திட்டங்களை வடிவமைத்து கொண்டு வர வேண்டும் என கூறினார்.

தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களில் நடக்க உள்ள நிலையில், “நாம் செய்கிற வேலைக்கு தேவையான வலிமை நமக்குக் கிடைக்க வேண்டும்” என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார். யாருக்காகவும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். இத்துடன், மக்கள் இடையே நம்பிக்கையை உருவாக்குவதே முக்கியமானது எனவும் தன் கருத்துகளைப் பகிர்ந்தார்.

தற்போது அதிமுகவிற்க்கு 10 % வாக்குகளை இழந்துள்ளதாக அவர் கூறினார். அதன் பின்னணி காரணிகளை பரிசீலித்து, அடுத்தடுத்த தேர்தல்களில் இளைஞர்களின் வாக்குகளை அதிகம் பெற முயற்சிக்க வேண்டும் என்றார்.