அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, சொல்லில் உறுதி, செயலில் வலிமை, இலக்கு நோக்கிய பயணம், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்று புரட்சி தலைவி அம்மா அவர்கள் விட்ட பணியை… தொட்டப் பணியை ….. தொடர்ந்து செய்து தமிழகத்தை தலை நிமிரச் செய்த தரணி போற்றிய முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களே…. மலைக்கலங்கினாலும்,  தன் நிலை கலங்காது.

ஞானத்தையே நமது மூலதனம் ஆக்கி என்றும், எதிலும், செம்மை சேர்த்து வரும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்…. அன்பு அண்ணன் கலகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு என் அன்பு நிறை வணக்கங்களை இதயபூர்வமாக பதிவு செய்கிறேன். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1968-இல் பத்திரிக்கையாளரை சந்தித்தபோது, அந்த ரிப்போர்ட்டர்கள் எல்லாம் கேட்டார்கள்.

நீங்கள் வெற்றி மேலே வெற்றி குவித்து கொண்டிருக்கிறீர்களே அதற்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் ? அதற்கு அம்மா அவர்கள் சொன்னார்கள், என்னுடைய உழைப்பு – என் மீது வைத்துள்ள நம்பிக்கையும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று சொன்னார்கள். அதேபோல அண்ணன் எடப்பாடி அவர்களின் வெற்றிக்கு காரணம் அவருடைய உழைப்பு, அவர் மீது நம்பிக்கை.

அதைவிட தொண்டர்களாகிய உங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கைதான் அதிகம்.  அதனால் வெற்றி மேல் வெற்றி அண்ணன் அவர்களுக்கு கிடைத்திருக்கும் என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் வந்துள்ள ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் எனது அன்பும் – நன்றியும் காலத்தின் அருமை கருதி கல்விக்கு கணினி தந்து, கழனிக்கு காவிரி தந்து, உளைக்கு அரிசி தந்து, தமிழக உயர்வுக்கு ஆளை தந்து, ஈடு இணை எல்லாம் மாநிலமாய்… தமிழகத்தை உயர்த்திட்ட பெருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியை சாரும் என புகழ்ந்து தள்ளினார்.