தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, படிக்கும் திறமை இருந்தும் வீட்டின் சூழ்நிலை காரணமாக படிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பல வங்கிகளில் கல்வி கடன் வழங்கி வருகின்றனர். அத்தகைய கடன்களைப் பெற விதிமுறைகளை பற்றி விரிவாக காண்போம். இந்த கல்வி கடனை பெறுவதற்கு கல்லூரிகளில் தேவைப்பட்ட பாடப் பிரிவில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும்.

அதோடு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் இருந்து படிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்ற எஸ்டிமேட் பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து இந்த கல்வி கடனை பெறுவதற்கு ரேஷன் கார்டு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். மேலும் அத்தகைய ஆவணங்களுடன் வங்கிகளுக்குச் சென்று கல்வி கடனுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.