
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருப்பவர் ஏக்நாத் ஷிண்டே. இவரது காருக்கு வெடிகுண்டு வைக்க போவதாக மும்பை காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் தொடர்ச்சியாக மிரட்டல் கொடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இன்று காலை முதல் கொரிகான், ஜெ. ஜெ மார்க் காவல் நிலையங்கள் மற்றும் மந்த்ராலயா காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்துள்ளனர். அதில் பேசிய மர்ம நபர் ஏக்நாத் ஷிண்டேயின் காரை வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்வதாக மிரட்டியுள்ளார்.