போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு காவல்துறை பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியாது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி பேசியதாவது, இன்றைய காலக்கட்டத்தில் போதைப் பொருட்கள் அதிகளவில் புழங்கி வருகின்றன. இதை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது.

தற்போது பள்ளி மாணவர்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர் என்பது வருத்தமாக உள்ளது. நாம் பயன்படுத்தும் ஒயிட்னர் வரைக்கும் போதை பொருள் என சொல்கிறார்கள். இவையனைத்தும் கடைகள் மற்றும் பள்ளி அருகில் விற்கப்படுகிறது என கூறுகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க இயலும். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதில் இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை செலுத்தவேண்டும். இதனிடையே பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழி நடத்த வேண்டும்” என கார்த்தி கூறினார்.