தற்போது இணைய பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை உணர்ந்திருக்கும் ஹேக்கர்கள் “இலவச இணையம்” எனும் பொறி வாயிலாக மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். ஆகவே எந்த நெட்வொர்க் சார்ந்து இலவச இணைப்பு வந்திருக்கிறதோ?, அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு விளக்கத்தை கேட்டுப் பெறுங்கள். எடுத்துக்காட்டாக ஏர்டெல் (அ) ஜியோ எனில் அந்தந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் மையத்தை தொடர்புகொண்டு கேட்டால் இலவச இணையம் கொடுப்பது குறித்த விளக்கத்தை கொடுத்துவிடுவார்கள்.

அவ்வாறு செய்யாமல் நேரடியாக லிங்கை கிளிக் செய்து அவர்கள் கேட்கும் தகவலை கொடுத்தால் நீங்கள் மோசடிக்காரர்களின் வலையில் சிக்குவதை யாராலும் தடுக்க முடியாது. இதுகுறித்து COAI-வும் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, இலவச இணையம் பற்றி பரவும் செய்தியில் உண்மையில்லை என தெரிவித்து உள்ளது. இது மோசடிக்காரர்கள் பரப்பும் லிங்க் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.