நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பகல் 12:30 மணி நிலவரப்படி அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுக 4-வது இடத்தில் உள்ளது. மேலும் தென் சென்னை, வேலூர், தர்மபுரி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.