விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டுள்ளது. இதில் திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா மொத்தம் 1,23,689 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதேபோன்று பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,026 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா. அபிநயா 10,419 வாக்குகளும் பெற்றுள்ளார். மேலும் தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா 67, 663 வாக்குகள் வித்தியாசத்தில் ‌தற்போது முன்னிலையில் இருப்பதால் வெற்றி உறுதியாகிவிட்டது.