
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றுள்ளார். தபால் வாக்குகளில் எப்போதும், திமுக ஆதிக்கம் செலுத்தும்.
ஆனால், நெல்லையில், முதல்முறையாக பாஜகவின் கை ஓங்கியுள்ளது. 23 தொகுதிகளில் பாஜக போட்டியிட்ட நிலையில் எல்.முருகன், தமிழிசை, பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால், நயினார் நாகேந்திரன் மட்டும் முன்னிலையில் இருக்கிறார்.