
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவி வந்தார். ஆனால் தற்போது ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் ஆயுதங்களை வழங்குவதில் விருப்பம் காட்ட வில்லை. ஏனென்றால் போரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த டிரம்ப் ஆயுதங்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தனர். அப்போது ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தில் இருந்த சிலர் ஜெலன்ஸ்கியை “இவர் ஒரு சர்வாதிகாரி”என்று விமர்சித்தனர்.
இந்நிலையில் ட்ரம்பின் மிக நெருக்கமான நட்பை கொண்டுள்ள எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது உக்ரைன் அதிபர் ஒரு மோசமான நபர் என்றும், ரஷ்யா உடனான போரை இவர் தொடர விரும்புகிறார் என்று கூறிய நிலையில், “தான் ஒரு பட்டனை அழுத்தினால் ஒட்டுமொத்த உக்ரைன் பாதுகாப்பு அமைப்பும் முடங்கி சரிந்து விடும்” என்று அவர் மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “போர் தொடங்கிய நாளிலிருந்து நான் உக்ரைனுக்காக புதினுடன் மோத தயாராக இருந்தேன், எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது, நான் அதை ஆப் செய்தால் உங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பும் காலியாகிவிடும், தோற்கப் போகிறோம் எனத் தெரிந்தும் உக்ரைன் பல ஆண்டுகளாக செய்யும் செயல்களால் பல படுகொலைகள் நடக்கிறது. மேலும் இது உண்மையில் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட எவரும் நிறுத்தவே விரும்புவார்கள்” என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.