கர்நாடக மாநிலம் உடுப்பியில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இங்குள்ள மால்பே என்ற பகுதியில் உள்ள சாலையில் பள்ளமாக இருக்கும் இடத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த பள்ளத்தில் எமதர்மராஜா, சித்திரகுப்தா வேடம் அணிந்து சிலர் நீளம் தாண்டுதல் போட்டி நடத்தினர். சாலைகளை அரசு சீரமைக்காவிட்டால் விபத்துக்கள் ஏற்படும் என்பதை வலியுறுத்த இந்தப் போராட்ட வடிவத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.