உலகம் முழுவதும் google நிறுவனத்தின் செயலிகளை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த google செயலி மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது google நிறுவனம் ஜிமெயில் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது மின்னஞ்சல் முகவரியை 2 வருடத்திற்கு மேலாக பயன்படுத்தாமல் இருப்பவர்களின் இமெயில் ஐடியை google நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி இவர்களின் இமெயில் ஐடிகள் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும்.

அதே சமயத்தில் பள்ளிகள், அலுவலகங்கள், இதர தொழில்துறை என தொழில் நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட இமெயில் ஐடி ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய இமெயில் ஐடி ஆக்டிவாக இருந்ததா இல்லையா என்பதை உடனே சோதித்து பார்க்க வேண்டும். ஒருவேளை உங்கள் ஐடி பயன்பாட்டில் இல்லை என்றால் புதுப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் இமெயில் ஐடியை பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்களின் ஐடியானது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட இருக்கிறது.