
விரார்-தாதர் உள்ளூர் ரயிலில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் மாற்றுத்திறனாளிக்கு என்று ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏறினார். இதனால் அங்கிருந்த மாற்றுத்திறனாளிகள் அவரிடம் கேட்டபோது, அவர்களை திட்டி, தனது காலணியைக் கொண்டு தாக்க தொடங்கினார். இதனால் விரத்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் ரயில்வே காவல்துறையினரை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். இதனை ரயிலில் இருந்த மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவை எடுத்துள்ளார்.
அந்தப் பெண் ஒருவரை மட்டுமல்ல 2 பேரை தனது காலணியால் தாக்கியுள்ளார். மூன்றாவது பயணி உள்ளே நுழைந்து அந்த பெண்ணை ஓரமாக இழுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. பின்பு ரயில் நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுபோன்ற சம்பவம் முன்னதாக பல முறை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.