
உலகளாவிய பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் PPSS Group, தங்களது புதிய “stab-proof vest” பாதுகாப்பு ஜாக்கெட்டை சோதனை செய்யும் வகையில், நேரில் தங்கள் CEO-யை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் (International Security Expo) மேடையில் நடந்த இந்த காட்சியில், பன்னாட்டு வணிகத் தலைவரே நேரில் குத்தப்பட்டார் என்பது தான் முக்கியத்துவம்!
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில், “அடுத்த தலைமுறை குத்தும் பாதுகாப்பு ஜாக்கெட்” (next-gen stab vest) எனக் கூறப்படும் கார்பன் ஃபைபர் அடிப்படையிலான புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்திய PPSS Group, அதன் நம்பிக்கையை நிரூபிக்க CEO வை நேரில் கத்தி போன்ற ஆயுதங்களால் குத்து சோதனையை ஏற்பாடு செய்தது.
Body armor company demonstrates their stab protection on their CEO pic.twitter.com/AIvRrfVLzz
— non aesthetic things (@PicturesFoIder) April 23, 2025
மேடையில் அவரது உடலுக்கு நேராக பல்வேறு ஆயுதங்கள் மூலம் ஊழியர் ஒருவர் குத்தினார். ஆனால் அதில் அவருக்கு ஒன்றும் ஆக வில்லை. இந்த சம்பவ வீடியோ இணையத்தில் வெளியானதும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அதைக் கலகலப்பாக எடுத்தாலும், பலரும் அந்த CEO-வின் உறுதி மற்றும் ஊழியரின் ‘தொழில்மயமான குத்தும்’ அக்கறையை பாராட்டியுள்ளனர்.
இந்த சோதனைக் காட்சிக்குப் பிறகு கடந்த 6 ஆண்டுகளாகவும் PPSS Group, உயர் தரமான பாதுகாப்பு உடைகள், ஊழியர்களுக்கான பாதுகாப்பு உதிரிகள், மற்றும் தொழில்துறையினர் பயன்பாடிற்கான workwear solution-களை வழங்கி வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நம்பிக்கையுடன் வழங்கப்படும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
ஒரு நிறுவனம் தங்களது CEO மூலமாக தயாரிப்பை நேரில் சோதனை செய்து காட்டுவது மிகவும் அபூர்வமான விஷயம். “செயல்கள் வார்த்தைகளை விட பலம் வாய்ந்தவை” என்பதை PPSS Group நிஜமாக நிரூபித்திருக்கிறது. இது தொழில்நுட்ப உலகத்தில் பாதுகாப்பு நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்திய நிகழ்வாகும்.