தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ எந்த என்ற திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதாவது அரசு பணிகளில் மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. அந்த வகையில் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனமான எல்ஜி நிறுவனத்துடன் இணைந்து பல்திறன் டெக்னீசியன் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் நிறுவனமான எல்ஜி உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டு, வீட்டு உபயோக எலக்ட்ரிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இது இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் தற்போது தமிழ்நாடு அரசுடன் இணைந்து இலவசமாக பயிற்சி மட்டும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

மேலும் எல்ஜியின் பார்ட்னர்கள், வேர்ல்பூல், ஹேர், rento mojo, சாம்சங், டைகிங் ஆகிய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த பயிற்சிக்கு 10ம் வகுப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் தகுதியானவர்கள் RAC, மெக் எலக்ட்ரானிக்கல் மற்றும் துறைக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி 220-660 என்ற மணி அளவில் நடைபெறும். அதாவது காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை சென்னையில் உள்ள எல்ஜி அகாடமியில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியின் மூலம் மாதம் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1220 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.