
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.
அந்த வீடியோவில் பசியுடன் இருந்த முதலை கரையில் படுத்திருப்பதை காண முடிகிறது. அப்போது ஒரு நபர் ஆபத்தான மலைப் பாம்பை அதன் முன்னால் கொண்டு வருகிறார். தன் எதிரில் மலைப் பாம்பை பார்த்ததும் முதலை கோபமடைந்து அதை தாக்குகிறது. மேலும் பாம்பின் கழுத்தை பிடித்து பல துண்டுகளாக கடித்து குதறுகிறது. அதன்பின் சில நொடிகளில் முதலை மலைப் பாம்பின் கதையை முடித்துவிடுகிறது. இதுகுறித்த வீடியோ சமூகஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram