ராஜஸ்தான் மாநிலம் துவாரகா கிராமத்தில் ரேனு என்ற இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். இவர் போட்டி தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்ற போது அரவிந்த் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பேசி பழகிய நிலையில் பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர்.

இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்து நிலையில் ரேனுவின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரேனுவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறி தன் காதலனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் டெல்லியில் வைத்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்கள் கொடுத்த ஒரு நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர்கள் தங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசிய நிலையில் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டியும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

அதில் ஒருவர் “அரசாங்க வேலை வாய்ப்பை விட்டு விட்டு ஒரு ஆடம்பரமற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளார்” என்று கூறினார். இன்னொருவர் “அரசு ஆசிரியருடன் திருமணம் செய்து இருந்தால் கோல்ட் டிக்கர்” என்று சொல்லி இருக்கலாம் என பதிவிட்டுள்ளார். மேலும் இவர்களுடைய காதல் கதை இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் உண்மை காதல் என்று கூறி வருகிறார்கள்.