
இன்றைய காலத்தில் பலரும் தங்களது காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவதை விரும்புகின்றனர். அதேபோன்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் ஒரு காதலர் தனக்கு வரவிருக்கும் மனைவியிடம் உயரமான மலைப் பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் வைத்து தனது காதலை சினிமா பாணியில் வெளிப்படுத்துகிறார்.
அதாவது தனது காதலியிடம் மோதிரத்தை காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாறு கேட்கிறார். திடீரென அந்த மோதிர பெட்டி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து விடுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நீர்வீழ்ச்சியை எட்டிப் பார்க்க சென்றபோது, பின் இருந்து சிலர் பீட்டர் என்ன நடந்தது? விழுந்து விட்டதா? என கேட்கும் சத்தம் மட்டும் வீடியோவில் பதிவாகி இருந்தது.
View this post on Instagram
உடனே மோதிரம் விழவில்லை என அமைதியாக திரும்பி நின்று அந்த பெண்ணிடம் மீண்டும் மோதிரம் பெட்டியை நீட்டுகிறார். இதனைப் பார்த்த பெண் மீண்டும் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்கிறார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.