ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மொரீஷியஸ், நேபாளம், பூடான் போன்ற நாடுகளுக்கு போகும்  இந்தியர்கள், அங்கேயுள்ள கடைகளில் போன் பே செயலி வாயிலாக பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவோர் தங்களின் வங்கி கணக்குகளை வெளி நாடுகளிலும் பயன்படுத்தும் அடிப்படையில் வைத்திருக்க வேண்டும்.

வெளி நாடுகளில் பயன்படுத்தும்போது, அந்நாட்டின் பண மதிப்புக்கு ஏற்றவாறு இந்திய ரூபாய் மதிப்பில் பணம் பிடித்தம் செய்யப்படும் என போன்பே தெரிவித்து உள்ளது. வரும் காலத்தில் மேலும் பல நாடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என போன் பே இணை நிறுவனர் ராகுல் சாரி தெரிவித்து உள்ளார். தமிழகம் உட்பட இந்தியர்கள் ஏராளமானோர் இந்த நாடுகளில் பணிபுரிந்து வரும் சூழ்நிலையில், அவர்கள் ஈஸியாக பணம் அனுப்ப இனிமேல் போன்பே பயனுள்ளதாக இருக்கும்.