
நீங்களும் யூடியூப் சேனல் வைத்து போதுமான சப்ஸ்கிரைபர்ஸ்களை சேர்க்க முடியாமல் திணறுகிறீர்கள் எனில் உங்களுக்கு இங்கே ஒரு நல்ல செய்தி இருக்கிறது. யூடியூப் சேனலில் இருந்து வருமானம் ஈட்ட சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கையை 1000 என்பதிலிருந்து 500-ஆக குறைத்துள்ளது. ஆகவே வெறும் 500 சப்ஸ்கிரைபர்ஸ் உங்களது சேனலுக்கு இருந்தாலே போதும், யூடியூப் வீடியோ வாயிலாக வருமானம் ஈட்ட இயலும். மேலும் வாட்ச் ஹவருக்கான (watch hour) அளவுகோல் 4,000-ல் இருந்து 3,000-ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் யூட்யூப் ஷார்ட்ஸ் வியூஸ்களுக்கான தேவை 10 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த குறைக்கப்பட்ட விஷயங்களானது முதலில் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், கனடா, தைவான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட யூடியூப் வீடியோ கிரியேட்டர்ஸ்களுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. Revenue sharing-ஐ அன்லாக் செய்ய இப்போதுள்ள இந்த தகுதி தேவைகள் மாறாமல் இருக்கும் என யூடியூப் தெரிவித்து உள்ளது. இதனிடையே யூடியூப் வரும் ஜூன் 26 முதல் தன் Stories அம்சத்தை நிறுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது. யூடியூப் சமீபத்தில் கம்யூனிட்டி போஸ்ட்களின் availability-ஐ விரிவுபடுத்தி இருக்கிறது. இது Expiration date கொண்ட டெக்ஸ்ட்-பேஸ்டு அப்டேட்ஸ்களை ஷேர் செய்வதற்கு கிரியேட்டர்ஸ்களை அனுமதிக்கிறது.