உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாம் மாவட்டத்தில் திவாகர்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் நிலையில் முதல் மனைவி இறந்துவிட்டார்.

இதனால் இவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் இரண்டாவது மனைவி மூலமாக ஆண் குழந்தை பிறக்கும் என்று திவாகர் நினைத்திருந்த நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தால் ஏமாற்றம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 2-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குடித்துவிட்டு தன் மனைவியிடனும் பெற்றோருடனும் திவாகர் சண்டை போட்டுள்ளார். அப்போது திடீரென திவாகர் மனைவியின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மாத பெண் குழந்தை வேகமாக தூக்கி தரையில் அடித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக பதறியபடி அழுது கொண்டே மருத்துவமனையை நோக்கி குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து திவாகரின் மனைவி காவல்துறையில் புகார் அளித்தார். புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் திவாகரை கைது செய்தனர்.