
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்து தனது பைக்கில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை குறித்த போட்டோக்களை அச்சடித்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கி வருகிறார்.
தனியார் மற்றும் கார்ப்பரேட் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் பாடம் கற்று கொடுப்பதால், தங்களது குழந்தைகளை இங்கு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இவரது இந்த பிரச்சாரம் குழந்தைகளின் பெற்றோரை வெகுவாக கவர்ந்து உள்ளது.