
நாட்டில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு pf என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிலையில் EPFO என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில் பொருளாதார சிரமம் இல்லாமல் வாழ்வதற்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ள ஒரு திட்டமாகும். இந்நிலையில் இபிஎஃப்ஓ பயனாளர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இபிஎஃப்ஓ கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு ஊழியர்கள் விண்ணப்பிப்பார்கள்.
அப்படி அவர்கள் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கும் போது அவர்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து பணம் கையில் வரும் வேதி வரை அவர்களுக்கு அதற்கான வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வட்டியானது செட்டில்மெண்ட் மாதத்தின் 24ஆம் தேதி வரையே கணக்கிடப்படுகிறது என்ற குற்றசாட்டு எழுந்தது. மேலும் இதன் காரணமாகத்தான் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கும் நாளிலிருந்து செட்டில்மெண்ட் ஆகும் நாள் வரை அந்த பணத்துக்கான வட்டி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.