இந்திய அரசாங்கத்தால் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயன்பெறும் வகையில் இபிஎஃப்ஓ தொடங்கப்பட்டது. இதில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சமமான அளவில் பங்களிக்கிறார்கள். இந்நிலையில் ஊழியர்கள் இபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது EDLI என்ற இலவச ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இபிஎஃப் உறுப்பினர்கள் பணியில் இருக்கும் போது அவர்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தகுதியானவர்கள். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்சம் இபிஎஃப் உறுப்பினர்கள் 12 மாதங்கள் டெபாசிட் செய்திருக்க வேண்டும். இதில் காப்பீட்டுத் தொகையானது கடந்த 12 மாதங்களில் சராசரி சம்பளம் மற்றும் அகவிலைப்படி போன்றவைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதில் இறப்பு நன்மையில் 35 மடங்கு சராசரி சம்பளம் + DA மற்றும் போனஸ் தொகை ரூ.1.5 லட்சம் போன்றவைகள் கிடைக்கும். இந்த திட்டம் ஊழியர் ஒருவர் இறக்கும்போது அவருடைய குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பினை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பணம் பெற இறப்பு சான்றிதழ், நியமனப் படிவம், இபிஎஃப் பாஸ் புக், வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவை.