
ஓபிஎஸ்சை நம்பி இருட்டில்கூட செல்லலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் நேற்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர். மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற எண்ணம்தான் சந்திக்க வைத்திருக்கிறது. அரக்கர்கள் போல செயல்படுபவர்களிடம் இருந்து கட்சியை மீட்போம் என்று கூறினர்.
பின்னர் ஓபிஎஸ் உடனான சந்திப்புக்கு பின் பேசிய அவர், “இபிஎஸ் ஒரு நம்பிக்கை துரோகி. அவரை நம்பி பின்னால் செல்ல முடியாது. ஆனால் அதே சமயம் ஒபிஎஸ்சை நம்பி இருட்டில் கூட செல்லலாம், மனதளவில் தங்கள் இருவருக்கும் எந்த ஒரு பகை உணர்வும் இல்லை, அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு நான் பேசியுள்ளேன்” என தெரிவித்தார்.