
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய பலி எண்ணிக்கையானது தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது . தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சியினர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான மருந்துகள் இல்லை என்றும் போதிய மருத்துவர்கள் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி கொடுக்கும் விதமாக, மருந்துகள் கையிருப்பு இல்லை என்று இபிஎஸ் தவறான தகவலை சொல்லி வருகிறார். மருந்துகள் கையிருப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை விட தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.