ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வாக்காளர்களை வெளியே விட்டுவிட்டு தேர்தலை எதிர்கொள் என்று பகிரங்க சவால் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அதிமுகவை  நேரடியாக எதிர்க்க திமுகவுக்கு தைரியம் இல்லை. அதிமுக ஆட்சி தான் பொற்கால ஆட்சியாக இருந்தது” என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.