
காமெடியன் ரோபோ ஷங்கர் சென்ற சில மாதங்களாகவே உடல் மெலிந்து காணப்பட்டதால் அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அவருடைய உடல்நிலை பற்றி பல வதந்திகளும் பரவி வந்தது. இதையடுத்து தனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது தான் உடல் மெலிய காரணம் என்று சமீபத்திய பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் மருத்துவ கல்லூரி ஒன்றில் Deaddiction குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர் பேசினார். அவர் பேசியதாவது “தான் சென்ற 5 மாதமாக படுத்த படுக்கையாக சாவின் விளிம்பில் இருந்தேன். எனக்கு இருந்த தவறான பழக்கத்தால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்ற அளவுக்கு அந்த பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தேன் என்று கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் நக்கீரன் கோபால் சார் தான் என்னை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை பெற வைத்து என்னை சரி செய்தார் என ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.