
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை முதல் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, பண பட்டுவாடா என பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர் சிவக்குமார் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து ஆதாரமற்ற புகார்களை கொடுத்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 6:00 மணிக்குள் வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.