
மத்திய ரயில்வேத்துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், படுக்கை ஒன்றில் வசதியாக படுத்திருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை ரயில்வே அமைச்சர் பகிர்ந்திருந்தார். ரயில்வே அமைச்சர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தை தனியாக உள்ளது.
அந்த புகைப்படத்தை பகிர்ந்த ரயில்வே அமைச்சர், நெட்டிசன்களுக்கு ஒரு கேள்வியை முன் வைத்தார். அதாவது, குழந்தை பயணிக்கிறது. இது விமானமா (அல்லது) ரயிலா..? அனைவரும் யூகிக்கவும் என்று அமைச்சர் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் தங்களது பதிலை கூறி வருகின்றனர்.
Baby On Board!
Plane seat or train seat?
Guess ⁉️ pic.twitter.com/x5snDfHADb— Ashwini Vaishnaw (मोदी का परिवार) (@AshwiniVaishnaw) February 3, 2023