
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி 3 உலகக் கோப்பைகளை வென்றது. அதோடு பல தொடர்களிலும் அவர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார். இவர் மொத்தம் 5 கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். இவருக்கு 43 வயதாகிறது. அதனால் தனது தலைமை பதவியை ருதுராஜ் கையில் ஒப்படைத்து விட்டு சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் தோனியுடன் வேலை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதுமே தோனியின் ரசிகனாக இருந்துள்ளேன், சிஎஸ்கே அணிக்காக விளையாட விரும்பினேன். அதோடு தோனியின் அருகில் இருந்து அந்த சூழல் எவ்வாறு இருக்கிறது, அவருடைய கிரிக்கெட் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க ஆசை பட்டேன். ஆனால் எனக்கு தோணியுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்னாபிரிக்கா வீரர்களின் சிலர் சிஎஸ்கே அணியில் விளையாடி உள்ளதால் அவர்களிடம் தோனியை குறித்து கேட்டு கொண்டேன். இப்போது தோணி அழைத்தால் கூட நான் அவரது தலைமையில் விளையாட தயாராக இருக்கிறேன். அவருடைய அவருடன் இணைந்து பணியாற்றவும் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.