செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என்னையெல்லாம் எதிர்க்கிறீங்க. அது தான் என் வளர்ச்சிக்கு காரணம். எல்லாரும் சேர்ந்து ஒரு மரத்த கல் எடுத்து அடிச்சீங்கன்னா…  அந்த மரம் வளரும். புதுசா ஒருத்தன் வந்துட்டான், வித்தியாசமா இருக்கான்,  அரசியல்வாதி மாதிரி இல்ல, இவன் பிகேவியர்  வேற, பேச்சு வேற, செய்கை வேற,  இவன் டீலிங் வேற. அப்படித்தான் நான் இருப்பேன்.

நான் அதை மாத்திகிட்டேன்னு வச்சுக்கோங்க நானும் அரசியல்வாதியா இருவேன். அப்புறம் நானும் பத்தோடு பதினொன்னா கர வேட்டி கட்டிட்டு சைடுல நிக்கணும். அந்த மாதிரி இருக்க விரும்பல. தனித்தன்மையா… என்னுடைய கொள்கையில நிக்கிறேன். சில பேரு எதிர்க்கணுமா  தயாரா இருக்கேன். பல பேரை எதிர்த்தாச்சு.  இன்னும் எக்ஸ்ட்ரா நாலு பேரை எதிர்க்கணுமா..?  அதையும் எதிர்ப்போம்.

நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும் பாலிடிக்ஸ் என்பதற்கு பல கோணங்கள், பல பாதைகள் இருக்கு.  ஆறுகள் மாதிரி.  பைனலா எல்லாம் போய் கடலில் தான் இணைய போது. அடிப்படையில் நான்  விவசாயி. டெல்லியில் போகின்றேன். எந்த மாதிரியான சூழல் நிலவ போகிறது ? டெல்லியில் என்ன போட்டி பரீட்சை எழுத போறேனா ?   யுபிஎஸ்சி தேர்வு, இன்டர்வியூ போறேனா.. ஆறு பேரு ஷேர் போட்டு உட்கார வைத்து இன்டர்வியூ  கேள்வி கேட்க போறாங்களா ? டெல்லிக்கு போனாலும் அப்படித்தான் இருப்பேன். போகலைன்னாலும் அப்படித்தான் இருப்பேன். ரெண்டு வருஷமா என்ன பார்த்து இருப்பீங்க…  ஏதாவது மாத்தி பேசுறானா என தெரிவித்தார்.