
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனும கொண்டா மாவட்டத்தில் கனபர்த்தி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மானசா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மானசா திடீரென உடல் நலக் குறைவினால் மரணமடைந்துவிட்டார். தன் மனைவியின் மீது சிராஜ் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். இதனால் அவருடைய பிரிவை தாங்க முடியாமல் மிகுந்த துயரத்திற்கு உள்ளானார்.
இந்நிலையில் தன்னுடைய மனைவியின் சமாதியில் காதல் சின்னம் உருவாக்க சிராஜ் திட்டமிட்டார். அதன்படி சுமார் 8 அடி உயரத்தில் காதல் சின்னமான இதயத்தை வடிவமைத்துள்ளார். இந்த இதய வடிவிலான சின்னம் தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிராஜ் தினந்தோறும் தன் மனைவியின் சமாதிக்கு குழந்தைகளுடன் சென்று வணங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.