தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள்  யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, கோயம்புத்தூர்ல கவுண்டம்பாளையம் தொகுதியில நின்னுகிட்டு,  மருதமலை முருகன் அவரைப் பற்றி பேசாமல் சென்றால் தப்பாயிரும். 1962வரை முருகனை பார்க்க வேண்டும் என்றால் ? கரண்ட் கிடையாது. சாதாரணமா படிக்கட்டில ஏறனும். திமுக தன்னுடைய கொள்கைக்காக மருதமலை முருகன் அவர்களுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள்.

அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தை கொடுத்தது யாருன்னா..?  சின்னப்ப  தேவர் ஐயா… உங்களுக்கு சின்னப்ப தேவர் ஐயாவை பத்தி உங்களுக்கு தெரியும். தமிழகத்திலே சினிமாவிலே முக்கியமான படைப்புகளை செய்தவர். அவரே போயி முருகப்பெருமானுக்கு அவரே கரண்டு ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டி,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை பார்த்து,  மருதமலை முருகன் கோயிலுக்கு கரண்ட் வந்துச்சி 

திமுக எப்பொழுதுமே சனாதான தர்மத்திற்கும்,  இந்து தர்மத்திற்கும் எதிராக இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது போல பல எடுத்துக்காட்டுகள் இருக்குது.  இன்னைக்கு நம்ம பெண்கள் ரோட்ல நிறைய பேர் நிக்கிறாங்க….  அவங்களுக்கு தெரியும் தாயை பழித்தாலோ…. இந்து தர்மத்தையும் பழித்தாலோ… நரேந்திர மோடியை பழித்தாலோ….. மூன்றும் சமம் என்று நினைக்கக் கூடியவர்கள் பெண்கள் என தெரிவித்தார்.