அண்டார்டிக் பெனிசுலா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் பணி பாதையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து வந்த பென்குயின் ஒன்று அவர்கள் வழிவிடும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்தது. அதன் பின் திரும்பிப் பார்த்த அந்த தம்பதிகள், பெண் குயின் செல்வதற்காக ஒதுங்கி நின்றனர். அவர்கள் ஒதுங்கியதும் பென்குயின் அழகாக அந்த இடத்தை கடந்து சென்றது.

அவர்களை தொந்தரவு செய்யாமல் பென்குயின் மிகவும் பொறுமையாக காத்திருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இரண்டு நாட்களில் 125 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதோடு ஒரு மில்லியலுக்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ciera Ybarra (@ciera.ybarra)