
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் தமிழகத்தில் நூலகம் அமைப்பது போல ஒவ்வொருத்தரும் செய்யணும்… நாங்களும் செய்தோம்… கொடி கம்பங்களில் கூட நாங்கள் ஒரு பெட்டியை வைத்து, கொடி கம்பங்களை கூட சும்மா விடாமல் நாங்கள் வைத்திருக்கிறோம்… நூலகம் என்பது இருக்கணும்…. பிள்ளைகள் படிக்கின்ற பழக்கத்தை வைக்க வேண்டும்…. சுவாசிப்பதை போல வாசிக்க வைக்கணும்…. அப்படி கற்கும் பொழுது தான்…. அறிவார்ந்த சமுகமாக நம்ம சமூகம் மேலே வரும்.
போர்க்களத்தில் துப்பாக்கி விட சிறந்த ஆயுதம் புத்தகங்களே என்று சொல்லுகிறார் லெனின். அதனால் அந்த செயலை தம்பி விஜய் செய்தாலும் சரி, அஜித் செய்தாலும், சூர்யா செய்தாலும், யார் செய்தாலும் நீங்கள் வரவேற்க வேண்டும்…. அதிலே நமக்கு ஒரு கெடு வாய்ப்பாக தெருவுக்கு இரண்டு படிப்பகங்கள் இல்லாமல், குடிப்பகங்கள் உருவாகி போய்விட்டது.
அது ஒன்றும் பண்ண முடியவில்லை. தனிமனிதன் அதை செய்கின்றார் என்றால் அதை அரசியல் என பார்க்காமல்….. சமூக அக்கறை…. ஒரு தலைமுறை வளர்த்தெடுக்கின்ற நோக்கம் அப்படி பார்க்க வேண்டியது தான். 234 தொகுதிகளிலும் சிலை திறக்காமல், 100 நூலகங்கள் திறப்பது மதிப்பிற்குரியது தான். எனக்கு பெரிய பின்புலம் அடையாளம் இல்லை…. அண்ணன் கமல்ஹாசனுக்கு….. விஜயகாந்த்… விஜய்க்கு ஒரு அடையாளம் இருக்கு…. புகழ் பெற்ற திரை கலைஞர்கள் விஜய் திறக்கிறார் என சொல்லுவாங்க என தெரிவித்தார்.