
புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். புதிய தமிழகம் கட்சியின் 27ஆவது ஆண்டு துவக்க விழா மாநாடு. இதே ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது. அன்று கட்சி இருந்த நிலைமை வேறு…
சமூகத்திற்கு இருந்த பிரச்சனைகள் வேறு… கட்சியின் கோரிக்கையாக இருந்தது வேறு….. இன்று அந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து விட்டு, புதிய கோரிக்கைகளுடன்…. புதிய பிரச்சினைகளுடன்…. புதிய தீர்வுகளை காண எதிர்நோக்கி இங்கே கூடியிருக்கிறோம்…. 25 ஆண்டுகளுக்கு முன்பு நம்ம மேல வெளியே இருந்து பெரிய தாக்குதல்கள் வரும்.
அரசு அடக்குமுறைகளை வரும்… அரசின் அதிகாரத்தின் துணையோட கூலிப்படை கும்பல்களும்…. களவாணி கும்பல்களும் நம்ம மீது தாக்குதல் நடந்த வருவாங்க. இன்னைக்கு அப்படி எல்லாம் பண்ண முடியாது. அதையெல்லாம் அதையெல்லாம் டாக்டர் ஐயா மாத்திட்டார். இன்னைக்கு அடிச்சா சும்மா இருப்போமா ? அதை எல்லாம் மாத்தியாச்சு… அன்று எல்லாம் மாத்திட்டு…. மாற்றப்பட்ட சமூகம் தான் இது… இதை எல்லாம் இளைஞ்ர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.