
தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே தனக்கென உருவாக்கியுள்ளவர். தமிழில் பானா காத்தாடி, நான் ஈ போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த சமயத்தில் தெலுங்கு நடிகர் ஆன நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை சிறப்பாக நடைபெற்ற சில வருடங்களில் பிரிந்து வாழ்வதாக அறிவித்ததால் இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. விவாகரத்து பெற்ற பின்னரே சமந்தா அதிக படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது “சிட்டாடெல் ஹனி பனி”என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் தொடரின் ப்ரோமோஷன் விழாவில் வெப் சீரிஸ் தொடரில் நடித்துள்ள கதாநாயகன் வருண் தவான் கதாநாயகி சமந்தா விடம் ராபிட் ஃபயர் கேள்வி கேட்பது போல் அமைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகை சமந்தா விடம், வருண் தவான் சில கேள்விகளை கேட்டார். அதில் தங்களது வாழ்வில் தேவையில்லாமல் செலவழித்த பெரும் தொகை எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா, தனது எக்ஸ்க்கு தான் செய்த விலை மதிப்பு இல்லாத பரிசு தான் நான் வாழ்வில் செய்த மிகப்பெரிய தேவையில்லாத செலவாகும் என சிரித்துக் கொண்டே கூறினார்.