
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ். இவர் கடந்த 3 முறை கஜ்வேல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வராக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் ஒரு முறை கூட கஜ்வேல் தொகுதிக்கு வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கண்டனங்களை தெரிவித்த பாஜக அந்த தொகுதி முழுவதும் சந்திரசேகர் ராவை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
அதோடு பேருந்து நிறுத்தங்கள் உள்ள பல பொது இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் சந்திரசேகர் ராவை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் பாஜக கட்சியை நிர்வாகிகள் புகார் கொடுத்திட்ட நிலையில் சந்திரசேகர் ராவை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.