
மதுரை பழங்காநத்ததில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் TNPSC தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தேர்வு எழுதும் உதவியாளரை அவர்களே தேர்வு செய்து அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது TNPSC செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.