
ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த விளையாட்டில் டாசை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பேட்டி 180 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. இதில் 337 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் சிராஜ் மற்றும் பும்ரா தனித்தனியே தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 82 வது ஓவரில் 3வது பந்தை சிக்ஸர் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிராஜ் அடுத்த பந்தில் டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்ட் செய்தார். இந்த ஓவர் முடியும் போது டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் கோபமாக “போ” என்றவாறு சைகை செய்தார். இந்த சம்பவம் சர்ச்சைக்கு உள்ளானது. இது குறித்து டிராவிஸ் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய போது,”நான் நன்றாக பந்து வீசினாய் எனக் கூறினேன். ஆனால் சிராஜ் தவறாக நினைத்துக் கொண்டார்”என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சிராஜ், நான் அவரை கிளீன் போல்ட் செய்ததற்காக அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
இதனால் தான் நான் கோபமடைந்தேன். அவர் பத்திரிகையாளர்கள் முன்பு பொய் கூறுகிறார் என தெரிவித்திருந்தார். இதனை அடுத்து 3வது நாள் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டிராவிஸ் மற்றும் சிராஜ் என்ன நடந்தது என ஒருவருக்கொருவர் பேசி சமாதானம் செய்து கொண்டனர். இதன் மூலம் பிரச்சனை முடிவுக்கு வந்தது என நினைத்த போது தான் ஐசிசி இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், இருவரிடமும் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளது.